Shadow

Tag: குற்றமே தண்டனை

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

கட்டுரை, சினிமா
தொடர்ந்து ஃபோன் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிக்னலைத் தாண்டியதும் இடதுபுறம் வண்டியை ஓரங்கட்டிப் பேசினேன். என்னெதிரே ஹெல்மெட் போடாதவர்களை மறித்துக் கொண்டிருந்தார் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். நான் வண்டியைச் சீராக நகர்த்தியதுமே என்னையும் மறித்தார். ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு, “உங்களை ஏன் தெரியுமா நிறுத்தினேன்? சிக்னல் விழும் முன்பே, ஃப்ரீ லெஃப்ட் போல் திரும்பிட்டீங்க!” என்றார். நான் கொஞ்சம் திகைத்து, “சார் நான் லெஃப்ட்ல இருந்து வரலை. நேரா வந்தேன். ஃபோன் பேச ஓரமா நிறுத்திட்டு வர்றேன்” என்றேன். லைசென்ஸை என்னிடம் கொடுத்தவாறு, “அவரைப் பாருங்க” என்றார். அவரருகில் போய் நின்றேன். “என்ன கேஸ்?” என்றார். “சார், நான் நேரா வந்தேன். லெஃப்ட்ல இருந்து வந்தேன் எனச் சொல்லி உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றேன். “அவரிடம் போய் பேசுங்க” என்றார். மீண்டும் என்னை மடக்கிய கான்ஸ்டபிளிடம் வந்தேன். “என்ன சொன்னார்?” எனக...