மங்கம்மா சபதம் (1943)
(முக்கிய நடிகர்கள்: ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராமசாமி, குளத்து மணி)டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்த போது அதை ஏலத்தில் எடுத்தவர் எஸ்.எஸ்.வாசன். தான் வாங்கிய நிறுவனத்திற்கு ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ எனப் பெயர் சூட்டினார். இங்கிருந்து முதலில் தயாரான படம் ‘மதன காமராஜன்’. எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பி.எஸ்.ராமையா கதை, வசனம். இது ஜெமினியின் சொந்தத் தயாரிப்பல்ல. அமிர்தம் டாக்கீஸ் என்கிற நிறுவனத்திற்காக ஜெமினி தயாரித்துக் கொடுத்த படம்.
ஜெமினியின் முத்திரையில் முதன் முதல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம் நந்தனார். 20.09.1942 இல் வெளியான இப்படத்தில் நந்தனாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி, நடித்திருந்தார். அபரிதமான வெற்றியை அடைந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஒரு சிறந்த இசைச்சித்திர...