Shadow

Tag: கூர்கா திரைப்படம்

கூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள இப்படம், தமிழகமெங்கும் 300+ திரையரங்குகளில் யோகிபாபுவிற்குப் பிரம்மாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. ஜீவாவின் கொரில்லா உட்பட, இந்த வாரம் 5 படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு. பகதூர் பாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாகச் சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா இனத்தவனான பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி அவ்வளவாகக் கவரவில்லை. ரவி மரியாவின் சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் இம்சையாய்த் தொடங்குகிற...
கூர்கா – லிப்ராவின் பிரம்மாண்ட வெளியீடு

கூர்கா – லிப்ராவின் பிரம்மாண்ட வெளியீடு

சினிமா, திரைத் துளி
'டார்லிங்', '100' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’. இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தைத் தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. முன்னணி நாயகர்கள் படங்களுக்கு நிகராக வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்ப...
கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். "காமெடியை எப்படிக் கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குநர் சாம் ஆண்டன். யோகி பாபு இரவு பகலாகத் தூங்கக் கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய 'முகம்' இந்தப் படத்தைக் காப்பாற்றும்" என்றார் நடிகர் மனோபாலா. ட்ரெய்லரில் ஒரு காட்சி வரும். 'என் முகம் என்ன...
கூர்கா படத்தில் கனடா மாடல் எலிஸ்ஸா

கூர்கா படத்தில் கனடா மாடல் எலிஸ்ஸா

சினிமா, திரைத் துளி
யோகி பாபுவின் கூர்கா படத்துக்குள் புதுப்புது ஆட்கள் வந்தவாறு இருக்கிறார்கள். சமீபத்தில் நவநாகரீக விஷயம் ஒன்றும் நடந்திருக்கிறது. ஆம், சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்கத் தூதர் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் சாம் ஆண்டன் இந்தக் கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களைப் பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரைத் தேர்வு செய்திருக்கிறார்.  இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, "கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்தப் படவாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்...