Shadow

Tag: கெத்து

கெத்து விமர்சனம்

கெத்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது எப்படி மீட்கிறான் என்பது தான் படத்தின் கதை. சேதுவாக உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைப் படத்திலிருந்து அடுத்த கட்ட சோதனையை அழகாகச் செய்து பார்த்துள்ளார். சந்தானம் இன்றி வரும் உதயநிதியின் முதல் படம் என்ற விசேஷப் பெருமை இப்படத்திற்கு உண்டு. கதையின் நாயகனாக இருப்பதால், உதயநிதியின் முந்தைய கதாபாத்திரங்களை விட நூலகத்தில் பணி புரியும் சேது கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறார். புத்தகத் திருடியாக வருகிறார் எமி ஜாக்சன். அதிலும் அவர் திருடும் புத்தகங்கள் எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமுள்ளன. உதாரணத்திற்கு, ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைத் திருடி ஆச்சரியம் ஏற்படுத்துகிறார். இப்படியொரு நாயகியை தமிழ்த் திரையில் உலவ விட்ட இயக்குநர் திருக்குமரனை எண்ணி வியக்காமல் இருக்கவே முடியவில்லை. 'சாவி.. சாவி..' என சின்னச் சின்ன வசனங்களிலும் தன் முத்திரையைப் ப...