Shadow

Tag: கேத்தரின் தெரசா

கலகலப்பு – 2 விமர்சனம்

கலகலப்பு – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஒன்-லைனைக் கையிலெடுத்து உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. பணக்கஷ்டத்தில் இருக்கும் ஜெய், தங்களுக்குச் சொந்தமாகக் காசியில் ஒரு மேன்ஷன் இருப்பதை அறிந்து அதை விற்கச் செல்கிறார். லீசுக்கு எடுத்த முருகா மேன்ஷனைச் சிரமத்தில் நடத்தி வருகிறார் ஜீவா. தங்கள்  இருவரையுமே ஏமாற்றிய சிவாவைத் தேடிச் செல்கின்றனர் ஜெய்யும் ஜீவாவும். அவர்கள் ஏமாறிய பணம் அவங்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பிரதான ஜோடிகளான ஜீவா - கேத்தரீன் தெரசா, ஜெய் - நிக்கி கல்ராணி அறிமுகப் படலம் முடிந்து, காதல் அத்தியாயம் தொடங்கும் வரை வழக்கமான ஜோரில் போகும் படம், சிவாவின் அறிமுகத்திற்குப் பின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. சதீஷ், ரோபோ சங்கர், மனோ பாலா, சந்தான பாரதி, விடிவி கணேஷ், ஜார்ஜ், சிங்கமுத்து, யோகி பாபு, முனீஷ்காந்த் என...