Shadow

Tag: கேவ்மிக் யு ஆரி

அம்மா கணக்கு விமர்சனம்

அம்மா கணக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரீட்சை என்ற முறையைக் கண்டுபிடித்தவரைக் கூட மாணவர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், கணக்கைக் கண்டுபிடித்தவன் மீது மட்டும் ஏராளாமான மாணவர்கள் கடுங்கோபத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். ’எவன்டா கணக்கைக் கண்டுபிடிச்சான்?’ என்ற வசனத்தை எரிச்சலான தொனியில் செவி மடுக்காத மாணவர்களோ, பெற்றோர்களோ அனேகமாக இருக்க மாட்டார்கள். ஏன் மகாகவியையே, ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என விழி பிதுங்கச் செய்த பெருமை கணக்கிற்கு உண்டு. இப்படத்தில் வரும் அம்மாவிற்கும், மகளிற்கும் கூட அதே பிரச்சனைதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல், மகளின் கணக்குப் பிரச்சனையை அம்மா எப்படிக் கணக்கு போட்டே தீர்க்க முயல்கிறார் என்பதுதான் படத்தின் கரு. ஓட்டுநரின் மகன் ஓட்டுநராகவும், வேலைக்காரியின் மகன் வேலைக்காரியாகவும் தானே போகப் போகிறார்கள்; அதற்கு ஏன் அநாவசியமாகக் கஷ்டப்பட்டுப் படிக்கணும் என்கிறாள் பத்தாம் வகுப்பு மாணவி. மே...
ஜிகர்தண்டா விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நே...
தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’

தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’

சினிமா, திரைச் செய்தி
“டீசரும் ட்ரெயிலரும் பார்த்துட்டு.. யாருய்யா ஒளிப்பதிவு பண்ண கேவ்மிக்? வாயில் பெயரே நுழையலையே எனச் சொன்னாங்க. தென்னிந்தியாவில் இருந்து வரப் போகும் இன்னொரு மிகப் பெரிய கேமிரா மேனாக கேவ்மிக் இருப்பார். இந்தப் படம் வெளிவந்த பின் அனைவரது வாயிலும் அவரது பெயர் சுலபமாக வந்துடும்” என்றார் நடிகர் சித்தார்த். “மஸ்த்ரம் என்ற ஹிந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு பண்ணேன். அதைப் பார்த்துட்டுதான் கார்த்திக் சுப்புராஜ் கூப்பிட்டார். இது எனது இரண்டாவது படம். தமிழில் முதற்படம்” என்றார் கேவ்மிக் யு ஆரி. தமிழ் நன்றாகப் பேசுகிறார். காரணம் கேவ்மிக் தஞ்சாவூர்க்காரர். பாண்டியிலுள்ள தனது தாத்தாவின் புகைப்பட ஸ்டூடியோவில் அதிக நேரம் செலவழித்த கேவ்மிக், ஃபோட்டோக்ராஃபி மீதிருந்த தனது காதலை உணர்ந்துள்ளார். சினிமேட்டோகிராஃபிக்காக படித்த இவர், 2001 முதல் சந்தோஷ் சிவனின் முதன்மை அசிஸ்டன்ட் கேமிரா மேனாக பணி புரிந்துள்ளார் என்ப...