Shadow

Tag: கே.ஆர்.விஜயா

ராயர் பரம்பரை விமர்சனம்

ராயர் பரம்பரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பரம்பரை பரம்பரையாக நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான் ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை. ஒரு முனையில் காதல் பிடிக்காத அப்பா, க மறுமுனையில் காதலிக்கும் மகள், சண்டை, பிரச்சனை, இறுதியில் சுபம். இதுதான் ராயர் பரம்பரை. பரம்பரைக்கே பழக்கப்பட்ட கதையாக இருப்பது ஒன்றும் ஆகப் பெரிய தவறில்லை. ஆனால் அந்தக் கதை சுவாரசியமும் இல்லாமல், உணர்வோடும் ஒன்றாமல், சிரிக்கவும் வைக்காமல் அலைக்கழிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும். கதை வலுவில்லாமல் இருக்கும் போது, அதன் திரைக்கதையாவது வலுவாக நின்று கதையைத் தாங்க வேண்டும். இப்படத்திலோ திரைக்கதை எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏதோ ஒரு திசையில் போய்க் கொண்டிருக்கிறது. முதற்பாதி முழுவதும் நாயகன் - நாயகி இருவரும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள். நாயகன் கழுகு கிருஷ்ணாவைக் காதலிப்பதாக சொல்லி அவரின் இரண்டு தோழிகள் லூட்டி அடிக்கிறார்கள். தங்கை ஓடிப் போனதால் காதலே பிடிக்காத ராயராக ...
பீரியட் ஃப்லிமாக உருவாகும் ‘மூத்தகுடி’

பீரியட் ஃப்லிமாக உருவாகும் ‘மூத்தகுடி’

சினிமா, திரைத் துளி
தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து, தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்', மற்றும் 'சாவி' படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். 'வெல்டன்', 'கடைசி பெஞ்ச் கார்த்தி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் “மூத்தகுடி” படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழம்பெரும் நடிகை K....
கோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா

கோடீஸ்வரி – இரட்டை வேடங்களில் கே.ஆர்.விஜயா

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "கோடீஸ்வரி" என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார். இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாகக் காவல்துறை அதிகாரி வேடத்தில் ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகிகளாக் அஷ்மா, சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக் ஆகியோர் நடிக்கிறார்கள். தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகி...