அந்தகன் விமர்சனம்
அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன்.
பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கிரிஷ். எப்படி அப்பிரச்சனையில் இருந்து மீள்கிறார் என்பதே படத்தின் கதை.
ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் முரளி எனும் பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சிம்ரனை, 'ஆம்பளப் பொறுக்கி' எனத் திட்டுகிறார். சின்ன பாத்திரம...