Shadow

Tag: கே.ஜி.எஃப் திரைப்படம்

KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

KGF: கோலார் தங்க வயலின் ரத்தமும் சதையுமான கதை

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
தென்னியாவில், கோலிவுட், டாலிவுட், மாலிவுட் போல் சாண்டல்வுட் தனது பிராந்தியத்தைத் தாண்டிப் பெரிதும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. விதிவிலக்கான சில படங்களைத் தவிர்டத்து, சாண்டல்வுட் தத்தித் தத்தியே நடை பழகி வந்தது. தற்போது, கன்னடத் திரையுலகமும் தனது பிராந்தியத்தை விட்டுத் தாவிப் பாயத் தொடங்கியுள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தாலே அது தெரியும். கே.ஜி.எஃப் (KGF) என்பது கோலார் கோல்ட் ஃபீல்ட் (கோலார் தங்க வயல்) என்பதன் சுருக்கமாகும். அக்டோபரில் வெளியான, வில்லன் எனும் கன்னடத் திரைப்படம் தான் இதுவரை வெளியான கன்னட படங்களிலேயே அதிக பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது. அதனுடைய பட்ஜெட் சுமார் 45 கோடி ஆகும். டிசம்பர் 21 அன்று வெளியாகவுள்ள கே.ஜி.எஃப் அந்தச் சாதனையை முறியடிக்கவுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 90 கோடியாகும். எப்படிப் பாலிவுட்டில், 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர...