”ஷில்பா மஞ்சுநாத் உண்மையான ஸ்போர்ட்ஸின் கஷ்டங்களை சொன்னார்” – பாக்யராஜ்
JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் "சிங்கப் பெண்ணே". விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்நிகழ்வினில்…தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ் பேசியதாவது
மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை எடுத்துள்ளோம். விளையாட்டை மையப்படுத்திய ஒரு அழகான படைப்பு. இப்படம் எடுக்க நிறைய சிரமங்கள் இருந்தது. படத்தில் உண்மையான நேஷனல் அளவிலான போட்டிகள் எல்லாம் வருகிறது. அதை எடுக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மையான விளையாட்டு நடக்கும் வரை காத்திருந்து படம்பிடித்தோம். உண்மையான விளையாட்டு வீராங்கனை நடித்துள்ளார் அவருக்க...