கொடி விமர்சனம்
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது காதல் வருகிறது. எதிரெதிர் கட்சிகளில் இருக்கும் தனுஷ் - த்ரிஷா காதல் என்னானது என்றும், தம்பி தனுஷ் ஏன் அரசியலுக்குள் வருகிறார் என்பதும்தான் கதை.
தனுஷின் ஒல்லியான உருவம் பேராசிரியர் கதாபாத்திரத்திற்கும் அந்நியமாக இருக்கிறது; அரசியல்வாதி பாத்திரத்தோடும் ஒட்டவ...