
கர்ணன் கொடையாளியா ?
(Image Courtesy: Quora.com)
கர்ணனின் வீரம்
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம்.
கொடை என்றால் தியாகம் என்று அகராதி சொல்கின்றது. எந்த ஒரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்கு தானமாகத் தருவது. அப்படித் தொடர்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே வள்ளல் தன்மை.
சீதக்காதி வள்ளல் பற்றிய கதை தெரியும் இல்லையா? படிக்காசு புலவர் தன் வறுமைக்காக அவரிடம் ...