கொலையுதிர் காலம் விமர்சனம்
ஒருவழியாக எண்ணற்ற இடைஞ்சல்களைக் கடந்து படம் வெளியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாக எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டதோ அதே அளவு சிக்கல்கள் படத்தின் மேக்கிங்கிலும் உள்ளது.
ஒரு ஹாலிவுட் படம் போல் ரம்மியமாக ஓப்பன் ஆகிறது. அரண்மனைக்கு நிகரான அழகான பெரிய மாளிகை, மிக அற்புதமான புல்வெளியும் உயரமான மதில் சுவர்கள், வெள்ளைக்கார வேலைக்காரப் பெண்மணி, ரசனையான ஒளிப்பதிவு என மிக அட்டகாசமாகப் படம் தொடங்குகிறது. பின் வாய்ஸ்-ஒவரில், நயன்தாரா யார், அவர் ஏன் இங்கிலாந்து வருகிறார் என வாய்ஸ்-ஓவரில் கதை சொல்கின்றனர். பின் அதே கதையை, விஷுவலாகவும் கூறியது கூறலாகச் சொல்லத் தொடங்குகிறார்கள். அதையும் கொட்டாவி வர வைக்குமளவு அசமந்தமான காட்சிகளால் காட்டுகின்றனர்.
சுஜாதாவின் நாவலான கொலையுதிர் காலத்திலிருந்து, இரண்டு சம்பவங்கள் மெலிதாக ஒத்துப் போகிறது. மரத்தின் பின்னால் தெரியும் ஓர் உருவமும், ஒரு பெண்ணின் பெயரில் சொத்து எழுதி...