திருகோகர்ணம் – அரபிக் கடலோரத்தில்
நானும் என் மனைவியும் ஒரே அலுவலகத்தில், ஒரே டீமில் பணிபுரிவதால், மற்றவரின் பணி சுமையினை நன்கு அறிவோம். என்னை விட என் மனைவிக்கே அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி அதிக ஆணி.
இந்தக் கவலைகளை மறக்க, இதுவரை நாங்கள் பார்த்திராத ஆனால் பார்க்க வேண்டிய ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து எனது தேடலைத் தொடங்கினேன்.
நாங்கள் ஹைதராபாத்தில் இருப்பதால், இங்கிருந்து செல்லக்கூடிய இடங்களை ஆராய்ந்தேன். மேலும் அது குளிர் காலம் என்பதால் ஹில் ஸ்டேஷனைத் தவிர்க்கவும் முடிவு செய்தேன்.
சில நாட்கள் இணையத்தில் மூழ்கி சில இடங்களைத் தேர்வு செய்தேன்
1. ஹம்பி, கர்நாடகா
2. டண்டேலி, ஹூப்ளி, கர்நாடகா
3. கோவா
4. கோதாவரி ரிவர் ட்ரிப், ராஜமுந்திரி,ஆந்திரா
5. அஜந்தா எல்லோரா, ஔரங்காபாத், மஹாராஷ்டிரா
6. கோகர்ணா (Gokarna), கர்நாடகா
இவை அனைத்தும் நாங்கள் ஓர் இரவு ரயில்/பேருந்து பயணத்தில் சென்றடையக் கூடிய இ...