Shadow

Tag: கோவிந்த் வசந்தா

Blue Star விமர்சனம்

Blue Star விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மற்றுமொரு ஆடுகளத்தின் கதை.  ஊரில் இரண்டு கிரிக்கெட் அணிகள். அவர்களிடையே ஜாதி ரீதியிலான பிளவு. இரண்டு அணிகளும் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் திரிய, வர்க்கம் அவர்கள் இருவரையுமே இன்னும் கீழாகத்தான் பார்க்கிறது என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் முகத்தில் அறைய, இரு அணிகளும் கைகோர்த்து வர்க்கத்தை ஜெயிப்பதே இந்த “ப்ளூ ஸ்டார்” படத்தின் கதை. படத்தின் துவக்கம் மிக மெதுவாகச் செல்கிறது. கதையற்ற காட்சிகளின் கோர்வையாக மட்டுமே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் படம், காலணி அணியினருக்கும், ஊர்க்கார அணியினருக்குமான 3 பால் மேட்சில் தான் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குப் பின்னர் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் விதிகளுக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, விளையாட்டுக்கே உண்டான சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் திரைப்படம் பரபரப்பாகச் செல்கிறது.  க்ளைமாக்ஸ் காட்சியில் பி...
”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது, இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்...
படவெட்டு விமர்சனம்

படவெட்டு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படவெட்டு (Battle) என்ற மலையாளச் சொல்லிற்குப் போராட்டம் எனப் பொருள் கொள்ளலாம். மலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மழை, காட்டுப்பன்றியுடன் போராடுகிறார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி தனக்குள்ளேயே மிகப்பெரும் அகப்போராட்டத்தை நடத்துபவனாக இருக்கிறான். மேலும், தன்னுடனான அகப்போராட்ட்த்தில் இருந்து மீண்டு, அக்கிராமத்து நிலங்களை இலவசங்களால் ஆக்கிரமிக்க நினைக்கும் குய்யாலி எனும் அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்ப்பதோடு படம் முடிகிறது. மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனான ரவி, ‘மலூர் எக்ஸ்பிரஸ்’ எனப் புகழப்படுகிறான். ஒரு விபத்தில் அவன் கால் முறிந்து போக, அதோடு தன் வாழ்க்கையை முடிந்து விட்டதாக மனதிற்குள் புழுங்கிப் புழுங்கித் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். அவன் சிரிப்பதையே மறந்துவிட்டிருப்பதால், அவன் முகம் உறைந்து போனதுபோல் எப்பொழுதும் இறுகியே உள்ளது. அவனது முன்னாள் காதலியுடனான பார்வைப் பரிமாற்றங்கள்...
கார்கி விமர்சனம்

கார்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடும் இயக்குநர் கெளதம் ராமசந்திரன், கடைசி ஃப்ரேம் வரை நம் கவனம் கலையாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த வருடத்தின் மிகச் சிறப்பான படங்களில் ஒன்றாகக் கார்கி புகழடையும்.  பள்ளி ஆசிரியையான கார்கியின் தந்தையைக் காவல் துறையினர் கைது செய்துவிடுகிறது. சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கு என்பதால், காவல்துறையினர் ரகசியமாகவும் கவனமாகவும் இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பெண் ஒருவரால், விஷயம் கசிந்து, கார்கியின் குடும்பம் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறது. தன் தந்தை குற்றமற்றவரென நிரூபிக்கத் தனியளாகப் போராடுகிறார் கார்கி. ஈ மொய்ப்பது போல் சூழும் பத்திரிகையாளர்கள், தந்தையைச் சந்திக்க விடாத நுண்ணியமான அதிகார பலம், வேலையிழப்பு, அவமானம், சமூகத்தின் கோபம் என கார்கி எதிர்கொள்ளும் அனைத்துமே கனமானவை. உண்மையில், படத்தின் கனத்தைக் கூட்டுவ...
சீதக்காதி விமர்சனம்

சீதக்காதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் மேடை நாடகக் கலைஞன், சுமார் 25 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய பார்வையாளர்கள் முன் சுருங்கி விடுகிறான். அரங்கத்திற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதல் காரணமாகத் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார் ஐயா ஆதிமூலம். தனது பேரனுக்கான மருத்துவச் செலவினைப் பற்றிய பரிதவிப்போடு, சுஜாதாவின் 'ஊஞ்சல்' நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அமரராகிறார் ஐயா ஆதிமூலம். ஐம்பது ஆண்டு காலம் நடிப்பிற்காக மட்டும் வாழ்ந்த ஐயா, அவரது மறைவிற்குப் பின்னும் நடிப்பின் மேலுள்ள காதலால், யார் மூலமாகவாது நடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவரது பேரனின் மருத்துவச் செலவுக்கும், அவரது நாடகக் குழுவுக்கும் பணம் கிடைக்கிறது. ஆக, ஐயா ஆதிமூலம் செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி போல், தன் குடும்பத்தினருக்கும் நாடகக் குழுவிற்கும...