Shadow

Tag: கோஸ்ட்பஸ்டர்ஸ்

கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சந்திரமுகி, காஞ்சனா, மாயா, டிமான்ட்டி காலனி என தமிழ்த் திரையுலகம் டிசைன் டிசைனாகப் பேய்களை மார்க்கெட்டில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஹாலிவுட்டில் இருந்து சமீபத்தில் கால் பதித்திருக்கும் பேய்க் கதைதான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். இது இந்த (GHOST BUSTERS) வரிசையில் மூன்றாவது படம் என்றபோதும் மற்ற படங்களைப் பற்றிய முன்கதைச் சுருக்கங்கள் இல்லாமலே நமக்குப் புரிகிறது. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரியும் எரினைச் சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் கையில் எரினும் அபியும் சேர்ந்து எழுதிய புத்தகத்தின் நகல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை காட்டி தன் வீட்டில் பேய் இருப்பதாகவும், அதை விரட்ட எரின் உதவ வேண்டும் என்றும் கேட்கிறார். தான் அந்தப் புத்தகத்தை எழுதவே இல்லை என்று மறுக்கும் எரின் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஏன் மறுத்தார் என்ற ஃபிளாஷ் பேக்கிற்கு எல்லாம் செல்...
ஹாலிவுட்டின் காமெடி பேய்கள்

ஹாலிவுட்டின் காமெடி பேய்கள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பேய்ப் படப் பின்னணியில், நகைச்சுவை ததும்ப ஒன்றன் பின் ஒன்றாகத் திரைப்படங்களை அள்ளி வழங்குவதில் வள்ளலாகி விட்டது தமிழ்ப் பட உலகம் மட்டும் தானா? நாங்களும் அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பது போல், ஹாலிவுட்டும் தற்போது புறப்பட்டு விட்டது. கோஸ்ட்பஸ்டர்ஸ் படத் தொடரில் மூன்றாவது படமான இதை இயக்கியுள்ளவர் பால் ஃபீக். கேட்டி டிப்போல்டுடன் இணைந்து இதன் திரைக்கதையையும் உருவாக்கி உள்ளார் பால் ஃபீக். மெல்லிசா மெக் கார்த்தி, க்றிஸ்டன் வீக், கேட் மெக்கினோன், லெஸ்லீ ஜோன்ஸ் ஆகியோர், நியூ யார்க் நகரில் பேய் ஒட்டுவதை ஒரு தொழிலாகத் தொடங்குகிறார்கள்! பேய் ஆராய்ச்சியாளர் அபீ யேட்ஸும், அறிவியல் ஆராய்ச்சியாளரான எரின் கில்பெர்ட்டும் பேய்களும் ஆவிகளும் இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள்! ஜில்லியன் ஹோல்ட்ஸ்மேன் என்கிற ஒரு பொறியாளர், அவர்கள் இருவருடன் இணைகிறார். நான்காவது நபராக அவர்களுடன் சேர்ந்து கொள்...