Shadow

Tag: சஞ்சய்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள். 50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி தன் படத்தில் நடிக்க வைத்து, நாயகி அருந்ததி நாயருக்குத் தெரியாமல் கேண்டிடாக ஷாட்கள் எடுத்துப் படத்தை முடித்து விடுகிறார். நாயகியோ விருமாண்டியின் மகள். பிரச்சனை பெரிதாகி நாயகனின் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. பிறகு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. புதுமுகம் சஞ்சய் நன்றாக நடனம் ஆடுகிறார்; நடிக்கவும் செய்கிறார். அதிகம்...