Shadow

Tag: சஞ்சிதா ஷெட்டி

“வடசென்னை நண்பர்களின் ரீயூனியன் – நண்பர் சரண் | மாயவலை

“வடசென்னை நண்பர்களின் ரீயூனியன் – நண்பர் சரண் | மாயவலை

சினிமா, திரைச் செய்தி
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'மாயவலை' ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள 'மாயவலை' திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்த...
அழகிய கண்ணே விமர்சனம்

அழகிய கண்ணே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை எழுதிக் கொடுத்து கரெக்ட் செய்து காதலிக்க தொடங்கியவுடன் சரி இது காதல் கதைதான் என்று தீர்மானித்திற்குத் தள்ளியது படம். இடையில், அறிமுக நாயகன் லியோ சிவகுமார் இயக்குநர்களுக்கு கடிதமாக எழுதித் தள்ளி இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகப் போகிறேன் என்று சென்னை கிளம்புகிறான். லியோ சிவகுமார், திண்டுக்கல் லியோனியின் மகனாவார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். அங்குப் போன...
ரம் விமர்சனம்

ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அநிருத் இசையமைத்த 13வது படமான ‘ரம்’, ஒரு பேய்ப்படம் என்பது ஒரு சுவாரசியமான ஒற்றுமை. பேய்ப்படங்கள் பார்ப்பதையே தவிர்க்க விரும்பும் அநிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட ஒரு குடும்பம், பேய்களாக மாறிக் கொன்றவர்களைப் பழி தீர்க்கிறது. வேலை இல்லா பட்டதாரி படத்தில், தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் (H சைலன்ட் என்பதால் ரிஷிகேஷ் என்றே திரையில் பெயர் வருகிறது) தான் இப்படத்தின் நாயகன். அநிருதின் கஸினும் கூட. படத்தின் நாயகன் என்றாலும், பேய்ப்படத்தில் ‘சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ பேய் தானே! ஆகையால், அவர்க்கு அழுத்தமான அறிமுகமாக இப்படம் அமையவில்லை என்றே தோன்றுகிறது. பேயிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அவரும் ஒருவர் என்ற அளவில் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறார். ‘இவன் முகத்தில ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்டான். இவன் கோபப்படுறானா வருத்தப்படுறானான்னே தெரில’ என விவ...
என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

சினிமா, திரைச் செய்தி
ரொமான்டிக் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த 'என்னோடு விளையாடு' திரைப்படம், கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் 'ஸ்டலிஷான லவ்' படமாக வந்துள்ளது எனச் சிலாகித்தார் படத்தின் எடிட்டர் கோபிகிருஷ்ணா. இவர், 'வழக்கு எண்:18/9', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இரண்டு லவ் ட்ராக், ஒரு சேஸிங் (chasing) ட்ராக் கொண்ட இப்படம், 'தனி ஒருவன்' போல் சுவாரசியமாக உள்ளதென நம்பிக்கையோடு தெரிவித்தார். படத்தில், பரத் - கதிர் என படத்தில் இரண்டு கதாநாயகன்கள். பரத்திற்கு ஜோடியாக சாந்தினி தமிழரசனும், கதிருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். காதல் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் மோசஸும், சேஸிங் போன்ற மற்ற ஜானர் பாடல்களை 'பர்மா' படத்தின் இசையமைப்பாளர் சுதர்ஷன் M.குமாரும் மெட்டமைத்துள்ளனர். 'ஒரு சின்ன பிரேக் இருந்தால் நல்லாயிருக்கும்' என ஒன்பது மாதங்கள் இடைவெளி விட்ட பின், மி...