Shadow

Tag: சதீஷ்குமார்

பைரி விமர்சனம்

பைரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புறா பந்தயத்தில் ஏற்படுகின்ற முன்பகை சிலரின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே பைரி திரைப்படத்தின் ஒன்லைன்.தமிழ் சினிமாவில் Cult movies வகையறா சினிமாக்கள் மிக மிக குறைவு. தமிழ் சினிமாவில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கொண்டாடப்பட்ட கல்ட் மூவிஸ் என்று சொன்னால், ஆரண்ய காண்டம், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், சூது கவ்வும் போன்ற திரைப்படங்களைக் கூறலாம். விக்ரம் வேதா மற்றும் பீட்ஸா படங்களைக் கூட ஒரு வித்த்தில் கல்ட் திரைப்படங்களாக எடுத்துக் கொள்ளக் கூடும்.இது போன்ற திரைப்படங்களில் என்ன இருக்குமென்றால் யதார்த்தம் ரத்தமும் சதையுமாக இருக்கும், யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான கதைகூறும் முறை இருக்கும். எல்லாக் கதாபாத்திரங்களும் சரி தவறுகள்: கலந்து படைக்கப்பட்டு இருப்பார்கள். திரைமொழியில் சொல்ல முயன்றால் Grey Shade அதாவது நல்லவனென்றும் சொல்ல முடியாத கெட்டவன் என்றும் ச...
தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கமான கோவை “பிராட்வே”

தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கமான கோவை “பிராட்வே”

திரைச் செய்தி, திரைத் துளி
தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது.ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்...
எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம்

எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம்

சினிமா, திரைச் செய்தி
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினைக் “காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை, “எம்.ஜி.ஆர்“ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்தப் படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான். எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்தலுவாக Y.G.மகேந்திரன், எ...