Shadow

Tag: சதீஷ் முத்து

அகத்தியா – டீசர் | ஜீவா | அர்ஜுன் | ராஷி கண்ணா

அகத்தியா – டீசர் | ஜீவா | அர்ஜுன் | ராஷி கண்ணா

Teaser, காணொளிகள், சினிமா
‘அகத்தியா’ படத்தின் டீசர் இன்று வெளியானது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகளும், முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையும், ஓர் அற்புதமான ஃபேண்டஸி திகில் த்ரில்லர் படத்திற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது.  ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் “அகத்தியா” படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். நடிகர் ஜீவா, "ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள் என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் அது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இப்படைப்பில் கண்டிப்பா...
அகத்தியா | ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில் – சாகச உலகம்

அகத்தியா | ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில் – சாகச உலகம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா"வாகும். ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் "அகத்தியா" படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என இப்படத்தின் டை...
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன்  ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவ...
சாய் ரோஹிணி – சோலை மலை இளவரசி

சாய் ரோஹிணி – சோலை மலை இளவரசி

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர். சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் ரோஹிணி. வேலைவாய்ப்பு எண்ணத்தில் செவிலியர் படிப்பைச் சென்னையில் வந்து முடித்தவர், வேலைக்குச் செல்லாமல் திரை வாய்ப்புகளைத் தேடி ஓடியிருக்கிறார். எங்கெங்கே புதுப் படங்களில் நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை என்கிற விளம்பரம் கண்டாலும் நேரில் சென்று ஒவ்வொரு தேர்விலும் கலந்து கொண்டுள்ளார். அப்படி வாய்ப்புக் கிடைத்து முதலில் நடித்த படம் தான் 'நாட் ரீச்சபிள்'. அப்படிக் கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் 'மிடில் ...
கதாநாயகனாகும் ‘அருவி’ மதன்

கதாநாயகனாகும் ‘அருவி’ மதன்

சினிமா, திரைச் செய்தி
அரும்புமீசை குறும்புபார்வை, வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று, முன்னணி நிறுவனம் தயாரிக்க 'விடுதலை' நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம். "சூரியும் நானும் பால்ய கால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம். பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும். 'விடுதலை' படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்லிகிட்டே இருப்பார். ‘காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனா நடிக்கிறத எப்படி ஏத்துக்கப் போறாங்கன்றத நெனச்சாத் தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா' ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். இப்போ, விடுதலை ட்ரெய்லர் வந்த பிறகு கிடைக்கிற...
எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு

இது புதிது
அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த 'அயலி' என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு தொடராக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் இணைய வழியை நோக்கி வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததே இந்தச் சிறப்புக்குக் காரணம். இத்தொடர் ஜீ5 தமிழில் வெளியானது. தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி என்கிற பெண்மணி இதைத் தனது 'எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ் (Estrella stories)’ நிறுவனத்தின் சார்பில் ...
‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கெனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக்கை பரிசு அளிப்பதாக அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்துப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் ஹஷீர். இந்தப் படத்தில்,க் ஆணவ கொலைகளுக்கு எ...
‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்துth தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னை ஏவி.எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாகப் படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்குக் கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ரோ...
யூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக!

யூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக!

சமூகம்
இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிப்பட்ட இசைப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையைத் துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தச் சேவையைத் துவக்கி வைத்தார். இதற்காக அந்தக் குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, 'எங்கள் குழுமம் தகுதி பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யூனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை நாள்தோறும் மகிழ்விக்க மற்றும் தங்களின் நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை...
“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ்

“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ்

சமூகம்
நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. திரு. செந்தில், திரு.பால்ராஜ், திரு.ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி அசைத்த...