Shadow

Tag: சதீஷ்

பைரி விமர்சனம்

பைரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புறா பந்தயத்தில் ஏற்படுகின்ற முன்பகை சிலரின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே பைரி திரைப்படத்தின் ஒன்லைன்.தமிழ் சினிமாவில் Cult movies வகையறா சினிமாக்கள் மிக மிக குறைவு. தமிழ் சினிமாவில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கொண்டாடப்பட்ட கல்ட் மூவிஸ் என்று சொன்னால், ஆரண்ய காண்டம், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், சூது கவ்வும் போன்ற திரைப்படங்களைக் கூறலாம். விக்ரம் வேதா மற்றும் பீட்ஸா படங்களைக் கூட ஒரு வித்த்தில் கல்ட் திரைப்படங்களாக எடுத்துக் கொள்ளக் கூடும்.இது போன்ற திரைப்படங்களில் என்ன இருக்குமென்றால் யதார்த்தம் ரத்தமும் சதையுமாக இருக்கும், யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான கதைகூறும் முறை இருக்கும். எல்லாக் கதாபாத்திரங்களும் சரி தவறுகள்: கலந்து படைக்கப்பட்டு இருப்பார்கள். திரைமொழியில் சொல்ல முயன்றால் Grey Shade அதாவது நல்லவனென்றும் சொல்ல முடியாத கெட்டவன் என்று...
கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ ஒன்றைத் தருவிப்பதையோ, வரவைப்பதையோ கான்ஜுரிங் எனச் சொல்வார்கள். அப்படி மந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்கின்றான் கண்ணப்பன். அவனுடன் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கும், சைக்காட்ரிஸ்ட் ஜானியும், கண்ணப்பனின் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித் தவறித் தூங்கினால், அந்த அமானுஷ்ய கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதில் இருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கான நேரத்தை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, நேராகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். சதீஷ் தனியாகச் சிக்கிக் கொண்ட காட்சிகளில், தொழில்நுட்பத்தின் உதவியால் அச்சுறுத்த முயற்சி செய்துள்ளனர். ஹாலிவுட்டின் கான்ஜுரிங் சீரிஸ் படங்களே பார்வையாளர்களை அச்சுறுத்தத் திணறி வரும் சூழலில், கோலிவுட் படங்கள் தஞ்சம் அடைவது நகைச்சுவையில். இப்படம்...
துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போதைப் பொருள் தடுப்புப்  பிரிவு ஐஜியின் மகள் மர்மமான முறையில் பூட்டிய காருக்குள் சடலமாக மீட்கப்படுகிறார்.  அதே நேரம் தன் மகனைத் தேடி சென்னைக்கு வரும் வயதான முஸ்லீம் பெரியவர்(சங்கிலி முருகன்), மகனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்க, அவன் இருக்கும் இடம் தெரியாமல் தெருத் தெருவாக அலைகிறார். ‘கொத்து பரோட்டோ” என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் விமலும், சதீஷும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு உதவ எண்ணி அப்பெரியவரின் மகன் காணாமல் போனது தொடர்பான தகவலை வீடியோவாக வெளியிட்டு உதவி கேட்கின்றனர்.  இதைத் தொடர்ந்து இறந்து போன ஐ.ஜியின் மகளுக்கும் காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகனுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் என்ன ஆனார்கள் என்கின்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியே “துடிக்கும் கரங்கள்”.முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக விமல் முயற்சித்திருக்கும் படம், முதல் சண்டைக் காட்சியில் ரவுண்டு கட்டி நிற்கு...
நாய்சேகர் விமர்சனம்

நாய்சேகர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான படங்கள் பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் வெளியாவது மக்களின் மனதிற்கும் ஆரோக்கியம். சினிமாவிற்கும் ஆரோக்கியம். அந்த வகையில் இந்தப் பொங்கலுக்கு ஒரு ஆரோக்கிய வரவு நாய்சேகர். மனிதனிடம் மிருகங்களின் குணம் உண்டு என்பார்கள். ஒருவேளை முழுக்க முழுக்க ஒரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தின் நடவடிக்கைகள் கலந்து விட்டால் என்னவாகும்? இப்படியான ஆர்வம் எழும் ஒரு கருவைக் கதையாகப் பிடித்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். ஹீரோ சதீஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு சிறு வயது முதலே நாய் என்றால் அலர்ஜி. அவரது வீட்டருகே ஒரு விஞ்ஞானி நாயின் டி.என்.ஏவை மனிதனுக்குள் கடத்தும் பரிசோதனை செய்துவருகிறார். அதற்காகவே ஒரு நாயை அடைத்துப் போட்டு அவர் வளர்த்து வருகிறார். ஒருநாள் அந்த நாய் வெளியில் வந்து சதீஷைக் கடித்து விடுகிறது. நாய் க...
கொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது. ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்...
கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

சினிமா, திரைச் செய்தி
கொரில்லா எனத் தலைப்பு வைத்திருந்தாலும், படத்தில் சேட்டை செய்வதோ ஒரு தாய்லாந்து சிம்பன்சி. உடையணியப் பிடிக்காத அந்த சிம்பன்சி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உடையைக் களைந்து மொட்டை மாடிக்கு ஓடி விடுவோம். உடன் நடிக்கும் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோரைக் கடித்தும், தலைமுடியைப் பிடுங்கியும் படாதபாடுப்படுத்தியுள்ளது. இவ்வளவு சேட்டை செய்த சிம்பன்சியை நாங்கள் துன்புறத்தவில்லை என நடையாய் நடந்து, விலங்கு நல வாரியத்தைச் சமாதானப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா. ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாய் செலவு செய்ய்யப்பட்டுள்ளது - சிம்பன்சியின் உணவுக்கும், சிம்பன்சியைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளமாகவும். 'எங்களை விட சிம்பன்சியைத்தான் செளகரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்' என ஜீவாவும் விளையாட்டாகச் சொன்னார். படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பது நிச்சயம். இ...
கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார். இத்தகைய தீவிர ஞாபக மறதியுடைய கஜினிகாந்த்க்குக் காதல் வந்தால்? தனது மறதியை மீறி எப்படித் தன் காதலில் ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை. ‘பலே பலே மகாதிவோய்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீ-மேக் இந்தப் படம். ‘ஹர ஹர மஹாதேவகி’ புகழ் சன்தோஷ் P.ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு கு...
பக்கா விமர்சனம்

பக்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விக்ரம் பிரபு முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அரசன்குடியைச் சேர்ந்த ஜமீன்தாரின் மகளான நதியாவிற்கு, திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி மீது காதல் வருகிறது. தனது அந்தஸ்தினை நினைத்துத் தயங்கும் பாண்டியை ஊர் ஊராய்த் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. தாம்பரம் ரயில் நிலையத்தில் நதியாவை உட்கார வைத்து விட்டுச் செல்லும் பாண்டி திடீரெனக் காணாமல் போவதால், தற்கொலை புரிந்து கொள்ள தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார் நதியா. அச்சமயம், குடித்து விட்டு தண்டவாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தோனி குமார் நதியாவைக் காப்பாற்றுகிறார். பாண்டி போலவே இருக்கும் தோனி குமாரிடம் தன் காதல் கதையைச் சொல்கிறார் நதியா. இது படத்தின் முதல் பாதி. நதியாவிடம், ரஜினி ராதாவுடனான தன் காதல் கதையைச் சொல்கிறார் தோனி குமார். இது ப்ரீ க்ளைமேக்ஸ் வரைக்குமான கதை. பாண்டி என்னானார்? நதிய...
சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1988 இல் வந்த கமல் படத்திற்கும், இப்படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; படத்தின் நாயகன் பெயர் சத்யா என்பதைத் தவிர்த்து. தெலுங்குத் திரையுலகில், 2016இன் தொடக்கத்தில் வெளிவந்த 'க்ஷணம்' என்ற வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கே இந்த "சத்யா" படம். ஆஸ்திரேலியாவில் பணி புரியும் சத்யாவிற்குத் தன் முன்னாள் காதலியான ஸ்வேதாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவளைப் பார்க்கச் சென்னை செல்றான் சத்யா. தன் மகளைக் காணவில்லை என்றும், தேடித் தரும்படியும் சத்யாவைக் கேட்கிறாள் ஸ்வேதா. அப்படியொரு மகளே ஸ்வேதாவிற்கு இல்லையெனக் காவல்துறையினரும், ஸ்வேதாவின் கணவனும் திட்டவிட்டமாகச் சொல்லிவிட, அடுத்து என்னாகிறது என்பதுதான் படத்தின் த்ரில்லிங் கதை. சதீஷைக் காமெடியனாக ஏற்றுக் கொள்வதிலேயே மனத்தடை விலகாத பட்சத்தில், அவரைச் சீரியசான பாத்திரத்தில் நடித்திருப்பதை உள்வாங்கிக் கொள்ள சிரமமாய் உள்ளது. ஆனால், தலையும் புர...
சோலோ – டப்பிங் படம் இல்லை

சோலோ – டப்பிங் படம் இல்லை

சினிமா, திரைச் செய்தி
“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா நடிச்சிருக்கார் துல்கர். தன்ஷிகாவும் செமயா நடிச்சிருக்காங்க” என்றார் சதீஷ். “ரெமோ படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்தப் படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்தப் படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றார் நடிக...
ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜி...
ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

சினிமா, திரைச் செய்தி
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். “பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா! நாலாவது மைக்கும் இருக்கா?’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெர...
ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும் முயற்சியிலுள்ள எஸ்.கே. காதலில் வெற்றியடைய வேலையில்லா எஸ்.கே. எடுக்கும் தொடர் முயற்சிகள் தான் படத்தின் கதை. வழக்கமான ரோட் சைட் ரோமியோ தான் எஸ்.கே.வும். எதைப் பார்த்து ‘லவ்’ வந்தது என தமிழ்ப்பட நாயகனிடம் கேட்டால், ‘முகத்தைப் பார்த்து லவ் பண்ணலை. மனசைப் பார்த்து லவ் பண்ணேன்’ எனச் சொல்வார்கள். ‘ஏன் லவ் ஃபெயிலியர் ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இந்தப் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கவே முடில’ என பாரில் (Bar) பெண்களைத் திட்டிப் பாட்டு பாடுவார்கள். முதலில் என்ன புரிந்ததோ, பின் என்ன புரியாமல் போனதோ?? தமிழ்ப் பட இயக்குநர்களுக்கே வெளிச்சம்! ஆனால், இப்படத்தில் எஸ்.கே.விற்குக் காவ்யாவின் முகத்தைப் பார்த்தோ, மனதைப் பார்த்தோ காதல் வருவதில்லை. மன்மதன் (Cupid) அம்பெய்து காதல் வரச் செய்து விடுகிறார். அதுவரை பெண்கள் விஷயத்தில் எஸ்.கே. சின்னத் தம்பி பிரபு ப...
ரெமோ – ஏன்? யார்? எப்படி?

ரெமோ – ஏன்? யார்? எப்படி?

சினிமா, திரைச் செய்தி
“ஒரு நல்ல டைட்டில சொல்றவங்களுக்கு 20,000 என அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் கிட்டச் சொன்னோம். ஒண்ணும் தேறலை. ‘ஐ-ஃபோன் 6 எஸ்’ தர்றோம் என்று கூடச் சொல்லிப் பார்த்தாச்சு. ‘நெருப்புடா’ பாடின நம்ம அருண்ராஜா காமராஜ்தான் ரெமோ எனத் தலைப்பைச் சொன்னார். ‘நல்லாயிருக்கே ஏன்?’ எனக் கேட்டதுக்கு, “அந்நியன்ல ரெமோவும் காதலுக்காக வேஷம் போட்டுப் போவார்” எனச் சொன்னார். எங்களுக்கும் ரோமியோ போல் கேட்ச்சியா டைட்டில் தேவைப்பட்டது. அதுவுமில்லாம ரெமோ ஆல்ரெடி சக்சஸான ஒரு பெயர்” என்றார் சிவகார்த்திகேயன். “இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் செகெண்ட் ஹீரோயின் தான். சிவகார்த்திகேயன் தான் ஃபர்ஸ்ட் ஹீரோயின்” என்றார் சதீஷ். அதை ஆமோதித்த கீர்த்தி சுரேஷும், “ஆம், சதீஷ் சொன்னாப்ல இந்தப் படத்தில் நான் செகண்ட் ஹீரோயின்தான். நான் இதுவரை யாரைப் பார்த்தும் இப்படி என் வாழ்க்கையில் பொறாமைப்பட்டதே இல்லை” என்றார். “மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பா...