சதுராச்சலம்: ஓர் அனுபவம்
காணாத அருவினுக்கும்
உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு
நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
லிங்கங்கள் மீதான ஈர்ப்பு எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வரிசையாக வெவ்வேறு உருவங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கங்களைப் பார்த்தாலே அலாதியான உணர்வு ஏற்படும். அதைப் பார்க்கவே பெரிய சிவன் கோயில்களுக்குச் செல்வதுண்டு. கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய லிங்கங்கள் ஒரு பிரகாரம் நெடுக்கே வரிசையாக அக்கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும். சற்றே ஒளி குறைந்த பிரகாரத்தில் லிங்கங்களைப் பார்த்துக் கொண்டு நடப்பது ஓர் அமானுஷ்ய உணர்வைத் தரும். அதுவும் நாம் மட்டுமே தனியாக அந்த இடத்தில் நிற்கும்போது அதைத் துல்லியமாக உணரலாம். அச்சமயம் பார்த்து வெளவால்கள் உரசிக் கொண்டு பறந்தால் சொல்லவே வேணாம்.
லிங்கங்களின் அச்சுறுத்தும் கம்பீரமும், சலனமற்ற அழகும் மனதை ஏதோ செய்துவிடும். இப்...