Shadow

Tag: சத்தீஸ்வரன்

குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்

குடிமகன் படத்தின் 3 வெற்றிகள் – கே.பாக்யராஜ்

சினிமா, திரைத் துளி
ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் குடிமகன். “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் இயக்கி இருந்தார். இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.அவர் கூறியதாவது, "குடிமகன் திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள்...
குடிமகன் விமர்சனம்

குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறேழு கி.மீ. தள்ளிப் போய்க் குடித்துக் கொண்டிருந்ததற்கும், ஊர்க்குள்ளேயே டாஸ்மாக் கொண்டு வந்ததற்கும், என்ன வேறுபாடு எனப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது 'குடிமகன்' படம். ஒரு ஊருக்குள் டாஸ்மாக் வருகின்றது. குடிப்பழக்கமில்லாத கந்தனுக்கு குடியைப் பழக்குகின்றனர் அவன் நண்பர்கள். குஇப்பழக்கத்திற்கு அடிமையாகும் கந்தனின் குடும்பம் எந்தக் கதிக்கு உள்ளானது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டாய் நாயகனைக் குடிக்க வைக்கும் அவனது நண்பர்கள், நாயகனின் வீழ்ச்சிக்குச் சாட்சியாகிறார்கள். அரசாங்கமே மக்களின் குடிப்பழக்கத்தை நம்பித்தான் இயங்குகிறது என்னும் வாதம் எவ்வளவு அபத்தமானது? ஆபத்தானது? எத்தனையோ குடும்பத்தின் சிதைவிற்கு ஓர் அரசே காரணமாய் இருப்பதை விட மிகப் பெரிய கேவலம் வேறொன்று உண்டா? படத்தின் தொடக்கமே ஒரு கவிதை போலுள்ளது. தன் மகன் ஆகாஷைச் சுமந்து கொண்டு கந்தன் செல்லும் அந்தக் கிராமத்துப் பாதை ரம்மிய...