Shadow

Tag: சத்யா

ராபர் – தடம் மாறிய இளைஞனின் வாழ்க்கை

ராபர் – தடம் மாறிய இளைஞனின் வாழ்க்கை

சினிமா, திரைச் செய்தி
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.இப்படத்தின் கதை என்ன?பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.ஆசை வெட்கம் அறியாது; அதை...
தூக்குதுரை விமர்சனம்

தூக்குதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பழங்கால காதல் கதை, பழங்கால பேய்க்கதை இரண்டும் சேர்ந்தால் அதுதான் தூக்குதுரை திரைப்படத்தின் கதை. இனியாவின் குடும்பம் திருவிழாக்களில் ஊரின் முதல் மரியாதையைப் பெறும் ஜமீன்தார் குடும்பம். திருவிழாக்களில் புரொஜெக்டர் மூலம் படம் ஓட்டிக் காட்டும் யோகிபாபுவிற்கும் இனியாவிற்கும் காதல் மலர்கிறது. தங்கள் காதலைக் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஊரைவிட்டு  ஓட முயற்சி செய்கிறார்கள். ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்ளும் அவர்களில் யோகிபாபுவை இனியா குடும்பம் ஊர் மக்களோடு சேர்ந்து ஒரு கிணற்றில் வைத்து எரித்துக் கொன்றுவிடுகிறார்கள்.  அந்த கிணற்றுக்குள் ஜமீன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு விலைமதிப்புமிக்க கிரீடம் மாட்டிக் கொள்கிறது. அதை எடுக்க வருபவர்களை யோகிபாபு பேயாக வந்து மிரட்டுகிறார். அதை மீறி கிரீடத்தை கைப்பற்றினார்களா இல்லையா என்பது மீதிக்கதை. யோகிபாபு இருந்தால...
அமேசானில் ஸ்ட்ரீம் செய்யப்படும் சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் “ஸ்பார்க் L.I.F.E”

அமேசானில் ஸ்ட்ரீம் செய்யப்படும் சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் “ஸ்பார்க் L.I.F.E”

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'ஸ்பார்க் L.I.F.E தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.'இளம் நாயகன்' விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 'ஸ்பார்க் L.I.F.E'. இந்தத் திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளம் நாயகன் விக்ராந்த் கதையின் நாயகனாக அறிமுகமானதுடன், இப்படத்திற்கு கதை, திரைக்கதையும் அவரே எழுதி இருக்கிறார். இப்படத்தை டெஃப் ஃப்ராக் நிறுவனம் தயாரித்துள்ளது.டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்‌ தயாரித்த இந்த திரைப்படத்திற்கு 'ஹிருதயம்' மற்றும் 'குஷி' புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். திரில்லர் ஜானரிலான படைப்புகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்...
“வடசென்னை நண்பர்களின் ரீயூனியன் – நண்பர் சரண் | மாயவலை

“வடசென்னை நண்பர்களின் ரீயூனியன் – நண்பர் சரண் | மாயவலை

சினிமா, திரைச் செய்தி
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'மாயவலை' ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள 'மாயவலை' திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்த...