கொத்தமங்கலம் சுப்பு
மாயலோகத்தில்..
சிறந்த இலக்கியவாதிகள் திரைப்படத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நிரூபித்த ஓர் இலக்கியவாதி கொத்தமங்கலம் சுப்பு.
கலைஞர் மு. கருணாநிதி, கதை வசனகர்த்தா இளங்கோவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிக அளவில் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியிருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு என்கிற எஸ்.எம்.சுப்ரமணியம்.
1936இல் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த 'சந்திரமோகனா' என்னும் திரைப்படத்தில் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபாலாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதன்பிறகு 1937இல் மைனர் ராஜாமணி என்கிற படத்தில் ஒரு நல்ல வேடம். சிங்காரப் பப்புச் செட்டியார். தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், நந்தனார் (ஜெமினி) பக்த நாரதர், தாசி அபரஞ்ச...