ராயன் விமர்சனம்
D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள்.
படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சிதமா...