ஐல – ஹாரர் த்ரில்லர் படம்
சினிமாவைப் பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும். மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத் தருவதால் அறிமுக இயக்குநர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தைத் திருப்புகின்றனர்.
அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி. ரியங்கா ஃபிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். தற்சமயம் இருவரும் ஃப்ரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள்.
திரு. தம்பி உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ், மலைய...