எதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்
தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் படம் "எதிர்வினையாற்று". இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸும் இளமைதாஸும். நாயகனான அலெக்ஸே படத்தைத் தயாரித்தும் இருக்கிறார்.
விழாவில் பேசிய அலெக்ஸ், "இந்தப் படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றி. டாக்டராக இருந்தவன் எப்படி நடிகராக மாறினார் என்று கேட்டார்கள். எனக்குச் சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது ஈர்ப்பு உண்டு. முதல் நன்றி என் அம்மாவிற்குத் தான். அவரிடம் ஒரு படத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்றதும், என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப் படத்தை இரவு பகலாக உழைத்து 24 நாட்களில் முடித்தோம். அதற்குக் காரணம் என் டைரக்...