Shadow

Tag: சனா

ரங்கூன் விமர்சனம்

ரங்கூன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரங்கூன் என்ற தலைப்பு இப்படத்திற்குப் பொருத்தமானதா என்பதே ஐயம்தான். ரங்கூன் என்ற நகரம் படத்தின் கதைக்குப் பெரிதும் உதவாததோடு, சில நிமிடங்களே படத்தில் வந்து போகிறது. நாயகனின் சொந்த கிராமம் கூட ரங்கூனில் இருந்து 90 கி.மீ.இலுள்ள ‘டேடயே’ என்றே காட்சிப்படுத்தியுள்ளனர். பர்மாவிலிருந்து சிறு வயதிலேயே அகதியாகச் சென்னைக்கு வரும் கெளதம் கார்த்திக்கிற்கு வாழ்க்கை அளிக்கும் படிப்பிணை தான் படத்தின் கதை. கெளதம் கார்த்திக்கின் நண்பர் 'அத்தோ' குமாராக லல்லு கலக்கியுள்ளார். அவர் வடச்சென்னைத் தமிழில் வெகு சரளமாய்ப் பேசி ரசிக்க வைக்கிறார். வெங்கட் என்கிற வெங்கடேசனாக வருன் கெளதம் கார்த்திக்கைக் கூட வடச்சென்னைக்காரராக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கெளதமை முழுவதுமாக மாற்றியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இதுவரையிலுமான கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படங்களிலேயே, இப்படம்தான் குறிப்பிட்டுச் சொல்ல...
“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

சினிமா, திரைச் செய்தி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் R.H.விக்ரமும், விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். “இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்தப் படத்தில், என்னைப் போலவே இருக்கும் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குநர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானவர். தெளிவான இயக்குநர்” என...
கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை விமர்சனம்

கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆம். படத்தின் பெயரே, 'கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்பதுதான். 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற தலைப்பு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளதால், படத்தின் பெயரிலேயே கவுண்டமணியைச் சேர்த்துவிட்டனர் படக்குழுவினர். இப்படத்தின் பெயர் ஒன்றே போதுமே, இப்படம் எப்படிப்பட்டதென யூகிக்க! சர்வம் கவுண்டர் (Counter) மயம். காதல் ஜோடிகளுக்கு சாதி, அந்தஸ்து, பெற்றோர்கள் இன்னபிற என அனைத்து எதிர்ப்புகளையும் மீறி கல்யாணம் செய்து வைப்பவர் கேரவன் கிருஷ்ணன். மதுரை வாழ் அரசியல்வாதி விஸ்வநாதனின் மகளுக்கு எப்படி எதிர்ப்புகளை மீறிச் சேர்த்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை. அறிமுக பாடல், க்ளைமேக்ஸ் ஃபைட் என கவுண்டமணியை முழுமுதற் ஹீரோவாக்கியுள்ளார் இயக்குநர் கணபதி பாலமுருகன். கவுண்டமணியின் ஒடுங்கிய தேகமும், இடுங்கிய முகமும், சோர்வான பார்வையும் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், அவர் தனது குரலினா...