Shadow

Tag: சன்தோஷ் P.ஜெயக்குமார்

பொய்க்கால் குதிரை விமர்சனம்

பொய்க்கால் குதிரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதிரவன் எனும் மையக் கதாபாத்திரத்திற்கு, ஒரு விபத்தில் முட்டி வரை இடது கால் போய்விடுகிறது. அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. தலைப்பு, அந்தச் செயற்கைக் காலைக் குறிக்கிறதே அன்றி, பொய்க்கால் குதிரை ஆட்டம் எனும் கலைக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. ஒரு தந்தை தன் மகளின் உயிரைக் காப்பதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார். அதனால் ஒரு கோடீஸ்வரியின் மகளைக் கடத்தி, தனது மகள் மகிழ்க்கு ஆப்ரேஷன் செய்யலாம் என முடிவெடுக்கிறார் கதிரவன். அவர் கடத்தும் முன், வேறு எவராலேயே அச்சிறுமி கடத்தப்பட, பழி கதிரவன் மேல் விழுகிறது. இரண்டு சிறுமிகளும் கதியும் என்னானது, கதிரவன் அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. ஒரு பெரும் நிறுவனத்தைக் கட்டியாளும் கோடீஸ்வரி ருத்ராவாக வரலட்சுமி சரத்குமார்க்கு மிடுக்கான கதாபாத்திரம். கதையோடு பொருந்தி வரும் பாத்திரம். அவர் சமயத்துக்குத் தக்கவாறு எடு...
கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார். இத்தகைய தீவிர ஞாபக மறதியுடைய கஜினிகாந்த்க்குக் காதல் வந்தால்? தனது மறதியை மீறி எப்படித் தன் காதலில் ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை. ‘பலே பலே மகாதிவோய்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீ-மேக் இந்தப் படம். ‘ஹர ஹர மஹாதேவகி’ புகழ் சன்தோஷ் P.ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்...
“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் ஹாரர் காமெடி வகை சேர்ந்த படம் என்பதாலும், ஹர ஹர மஹாதேவகி இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கியுள்ளதாலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது. படத்தின் இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில், "நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்? கருத்துச் சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்துத் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாகப் பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்...
ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜினி...