Shadow

Tag: சன்னி லியோன்

பேட்ட ராப் – பிரபுதேவா | வேதிகா | சன்னி லியோன்

பேட்ட ராப் – பிரபுதேவா | வேதிகா | சன்னி லியோன்

சினிமா, திரைத் துளி
நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் தமிழகத் திரையரங்க வெளியீட்டு உரிமையை சஃபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.இயக்குநர் எஸ்.ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ப்ளூ ஹில் பி...
தென்னிந்திய ஆக்ஷன் நாயகியாகச் சன்னி லியோன்

தென்னிந்திய ஆக்ஷன் நாயகியாகச் சன்னி லியோன்

சினிமா, திரைத் துளி
சன்னி லியோனை யாரென அறியாதவரும் உண்டோ? சமீபமாக அவரது வரவால் கேரளாவின் கொச்சி நகரம் ஸ்தம்பித்தது எல்லாம் வரலாறு. அவ்வளவு புகழ் மிக்க சன்னி லியோன், நேரடித் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவுள்ளார். இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதைத் தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்தியக் கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். போராளிகள் தோளை உயர்த்தி டென்ஷன் ஆக வேண்டாம். ஏனெனில், சன்னி லியோன் அவரின் அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற தைரியமான முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு சிறப்பம்சம் என்னெவென்றால், இது ஒரு சரித்திரப் படமும் கூட! இப்படத்திற்காகக் கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்ட...