Shadow

Tag: சமூக நீதி

கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

சமூகம்
கொரோனா தொற்றுக் காரணமாக அரசு ஊரடங்கை அறிவித்த பின் அடித்தட்டு மக்கள் தான் வழக்கம் போல் இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். இருக்க இடம், பார்க்க வேலை, உண்ண உணவு என எதுவுமற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசின் கல்வித்துறை தற்போது ஆன்லைன் கல்வி மூலமாக ஏழைகளின் கல்விக்கே வேட்டு வைத்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் தொடர்விடுமுறை காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு ஆன்லைன் வழியில் கற்றுத்தர அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் ஸ்மார்ட் ஃபோனோ, லேப்டாப் வசதியோ இல்லாத வீட்டுப்பிள்ளைகள் எப்படி கல்வி பயில இயலும்? மேலும் ஒருநாளைக்குப் பாடத்தை ஆன்லைனில் முழுதும் கவனிக்க வேண்டும் என்றால் டெய்லி டேட்டா 3 GB வரை தேவைப்படும் என்கிறார்கள். இல்லாத எளியவர்கள் எப்படி ரீசார்ஜ் செய்ய பெருந்தொகை செலவு செய்யமுடியும். மேலும் சில தன்னார்வலர்கள், சிலருக்குக் கற்றலுக்காக ஃபோன், லேப்டாப் போன்றவற்றை வழங்குகிறா...
நீட் எனும் அவலட்சணம்

நீட் எனும் அவலட்சணம்

சமூகம்
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இப்போது அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவச் செல்வத்திடம் நீட் கோச்சிங் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பிள்ளை படித்தது தமிழகத்தின் டாப் 10 பள்ளிகளில் (யார் சொன்னா - அவங்களே சொல்லிப்பாங்க) ஒன்றில். பதிலைக் கேட்டு நொந்தது தான் மிச்சம். 40 நாட்கள். வேதியியல், உயிரியலில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரும்பத் திரும்பத் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்களாம். இயற்பியலைப் படிக்கவே தேவையில்லையாம் (நெகடிவ் மார்க்கைத் தவிர்க்க அந்த வினாக்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள்) ஆக மூன்று பாடங்களில் ஒன்றைப் படிக்கவே தேவையில்லை. மற்ற இரண்டையும் முழுவதுமாகப் படிக்கத் தேவையில்லை. ஆனாலும் மருத்துவராகி விடலாம். மாநிலப் பாடத்திட்டத்தின் படி மருத்துவம் சேர்வதற்கு மூன்று பாடங்களிலும் குறைந்த பட்சம் 90-95% கண்டிப்பாகத் தேவை. ஆனாலும் நீட் மாத...