Shadow

Tag: சயிஷா

டெடி விமர்சனம்

டெடி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே! OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியின்...
காப்பான் விமர்சனம்

காப்பான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதிர் எனும் கதிரவன், இந்திய அரசாங்கத்தைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒற்றேவல் புரியும் ரகசிய இராணுவ வீரர். அவரைத் தனது பெர்சனல் பாடிகார்டாக, ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் (SPG) அதிகாரியாக நியமித்துக் கொள்கிறார் பிரதமர் சந்திரகாந்த் வர்மா. பிரதமரைக் கொல்லும் நடக்கும் சதிகளில் இருந்து கதிர், சந்திரகாந்தைக் காப்பாற்றிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அயன் படத்தில், படைப்பாற்றல் மிக்கக் கடத்தல்காரராகவும்; மாற்றான் படத்தில், தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை அழிப்பவராகவும்; இப்படத்தில், நாாட்டின் பிரதமரைக் காப்பவராகவும் சூர்யா நடித்துள்ளார், வெற்றிகரமாக கே.வி.ஆனந்துடன் இணைந்து ஒரு ட்ரைலஜியை நிறைவு செய்துள்ளார் சூர்யா. கே.வி.ஆனந்த் படங்களில் நிலவும் ஒரு பிரச்சனை – படத்தின் நீளம். இங்கு சினிமா செய்திகளை ரசிகர்கள் தேடித் தேடிச் சேகரிக்கின்றனர். சூர்யா, SPG-ஐச் சேர...