போங்கு விமர்சனம்
ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமில் வேலை செய்கிறார் 'ரேர் பீஸ்' நட்டி. ஒரு கார் ஒன்றினை டெலிவரி செய்யப் போகும் பொழுது, அக்காரை எவரோ துப்பாக்கி முனையில் நட்டியை நிறுத்தி லவட்டிக் கொண்டு போய் விடுகின்றனர். இதனால் நட்டியின் வேலை போகிறது; கூடவே 'பிளாக்-லிஸ்ட்' செய்யப்படுவதால் நட்டி மற்றும் அவரது நண்பர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட, நட்டி தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்கிறார். அது அவரை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.
பேச்சில், நடிப்பில் எனக் கொஞ்சம் கூட தன் முந்தைய படங்களில் இருந்து மாறிடாத நடராஜன். அவருக்கு ஜோடியாக ருஹி சிங் நடித்துள்ளார். ஹேக்கிங் செய்வதில் கில்லாடியான பாத்திரத்தில் நடித்துள்ளார். சி.சி.டி.வி. கேமிராக்களை முடக்குகிறார்; BMW காரின் கதவை அன்லாக் செய்கிறார். அவரது உதட்டசைவு வசனங்களோடு ஒத்துப் போவதால், சங்கடமின்றி அவரது அழகு மனத...