ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரைத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.
உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவிகித பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.
டிஜிட்டல் தளங்களில் வலைதளத் தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனைத் துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.
இந்த விளை...