
சண்டி வீரன் விமர்சனம்
மீண்டும் மருத நிலத்தைக் களமாக்கி திரையேற்றியுள்ளார் சற்குணம்.
ஓர் ஊரின் குடிநீர் ஆதாரம் மற்றொரு ஊரின் ஆளுகைக்குள் உள்ளது. அவ்விரு ஊர்களுக்கிடையில் மூளும் வெறுப்பின் முடிவென்ன என்பதுதான் படத்தின் கதை.
சிங்கப்பூருக்கும் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பின் பின்னணியை நேர்த்தியாக நாயகனின் அறிமுகத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பின் படத்தில் எந்த சுவாரசியுமும் இல்லாமல் இடைவேளையின் பொழுதே கதை தொடங்குகிறது. அதர்வா, ஆனந்தி காதல் காட்சிகள் ஈர்க்கத் தவறுவதால், படத்தில் ஒன்ற சிரமமாய் இருக்கிறது.
கவுன்சிலராகவும், நாயகியின் தந்தையாகவும் லால் நடித்துள்ளார். போலிஸ் ஜீப்பை தண்ணிக்குள் தள்ளிவிட்டு, காவல்துறை அதிகாரியை எச்சரிக்கும் அளவு மிக வலுவான கதாப்பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறார். க்ளைமேக்ஸில் அந்த சித்தரிப்பு அவ...