பிச்சைக்காரன் விமர்சனம்
கோமாவில் இருக்கும் தனது தாய் மீள வேண்டுமென்பதற்காக, ஒரு மண்டலத்திற்கு தன் அடையாளத்தையும் கெளரவத்தையும் விட்டு பிச்சையெடுப்பதாக வேண்டுதல் வைக்கிறான் பணக்காரனான அருள். அந்த வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான்பிச்சைக்காரனின் கதை.
கஞ்சத்தனத்திற்குத் தனது நடிப்பால் புது இலக்கணம் வகுத்துள்ளார் முத்துராமன். பணத்தைக் கண்டதும் சொக்கித் தூங்குவதும், விரலென்ன உயிரே போனாலும் பைசா தர முடியாதென வாயில் அவராக துணியை அடைத்துக் கொள்வதும் செம காமெடி. முத்துராமனைப் போன்றே, எல்லாப் பாத்திர வடிவமைப்பிலும் இயக்குநர் சசி கவனமாக இருந்து படத்திற்குச் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளாரென்றே சொல்லவேண்டும். உதாரணம், முத்துராமனின் கார் ஓட்டுநராக வருபவரைச் சொல்லலாம்.
விஜய் ஆண்டனியின் அம்மாவாக தீபா ராமானுஜம் நடித்துள்ளார். உத்தம வில்லனில் பூஜா குமாரின் அம்மாவாகவும், பசங்க -2 இல் பிரின்சிபலாகவும், ரஜினிமுருகனில் சிவகார்த...