“சாணிக்காயிதத்தின் பயணம்” – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்
சாணிக்காயிதம் பயணம் ஒரு சிறு கருவுடன் தொடங்கியது. அது நான்கு நாட்களில் உருவாகியது. மனித இயல்பைப் பற்றிய அடிப்படை புரிதல்தான் இந்தப் படத்தின் முக்கிய சாராம்சம் ஆகும். பழிவாங்கும் கதைக்களமான ராக்கி திரைப்படத்தில் இருந்தே, அருண் மாதேஸ்வரன் பழிவாங்கும் கதையை மூன்று பகுதியாய் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்த சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “தமிழ்த் திரையுலகில் பழிவாங்கும் கதைகள் புதியதல்ல. ஏற்கனவே மில்லியன் கணக்கில் இந்த மாதிரி கதைகள் வந்துள்ளன. இருப்பினும், சாணிக்காயிதம் மற்றும் எனது முந்தைய படமான ராக்கியில் காட்டப்படும் யதார்த்தத்தின் அம்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவகையில் புதியது. மற்ற படங்களில் காட்டப்படும் வன்முறை ஸ்டைலாக இருக்கும், அதிலிருந்து இந்தப் படம் மாறுபடும். சாணிக் காயிதம் திரைப்பட...