சாணிக்காயிதம் விமர்சனம்
க்வென்டின் டரான்டினோ படங்களின் பாதிப்பில், ரத்தமும் சதையும் தெறிக்கும் ஒரு பழிவாங்கும் படம் தமிழில் வந்தால் எப்படியிருக்கும்?
சாதிப் பெருமிதம் எனும் கயமையால் நிகழ்த்தப்படும் கொடூரத்தைப் பொறுக்கமாட்டாமல், பாதிக்கப்பட்ட பொன்னி எனும் ஒரு பெண் பழிவாங்கப் புறப்படுவதே சாணிக்காயிதத்தின் கதை. தன் கணவனையும் மகளையும் உயிரோடு எரித்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சாரார் முனையும் போது, சட்டமாவது மயிராவது என தனது கைகளாலேயே அனைவரையும் உயிரோடு எரித்துக் கொல்லும் வன்மத்துடன் தன் அண்ணன் சங்கையாவுடன் இணைந்து கொலை தாண்டவமாடுகிறார் பொன்னி.
நகைமுரண் என்னவென்றால், புதுப்பேட்டையில் தனுஷைக் கொண்டு செல்வராகவன் காட்சிப்படுத்திய தனி மனிதனுள் தன்னிச்சையாக எழும் கொலைவெறியை, செல்வராகவனைக் கொண்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அப்படத்தில் தனுஷுக்கான நியாயங்களை விட, இப்படத்தில் செல...