“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்தியேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார்.
சாணிக்காயிதம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, 'மலர்ந்தும் மலராத..' என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரும்,...