சபாநாயகன் விமர்சனம்
காதலும் கடந்து போகும்; அது காலம் செல்ல செல்ல மறந்து போகும் என்கின்ற 2கே கிட்ஸ்கான டேக் இட் ஈஸி காதல் கதை தான் இந்த சபாநாயகன்.அரவிந்த் என்று சொல்லப்படும் ச.பா.அரவிந்திற்கு பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் டிகிரி முடிக்கும் போது ஒரு காதல், பின்னர் சிங்கப்பூரில் இருக்கும் அம்மா அப்பாவை பார்க்கச் சென்ற போது அங்கு ஒரு குட்டி காதல், மீண்டும் பள்ளிகால க்ரஷ் திரும்ப வாழ்க்கையில் வந்ததால் மீண்டும் அவளுடன் காதல், பிறகு எம்.பி.ஏ படிக்கும் போது மற்றுமொரு காதல் இப்படி பல்வேறு காதல்கள் அடங்கிய அரவிந்த்-தின் ஆட்டோகிராப் டைரியே இந்த சபாநாயகன்.படம் எப்படியோ தொடங்கி, எப்படியோ நகர்ந்து எப்படியோ முடிந்து போகிறது. பள்ளிகால காதலோ, கல்லூரி காலக் காதலோ, எம்.பி.ஏ கால காதலோ எதுவுமே மனதில் ஒட்டவில்லை. நாயக கதாபாத்திரமோ தன் காதல் மீதோ, தன் காதலி மீதோ எந்தவித பிடிப்பும் அழுத்தமும் தீவிரத்தன்மையும் இல்லாமல...