Shadow

Tag: சாம்வெல் ஜாக்சன்

‘அன்ப்ரேக்கபிள்’ ட்ரைலாஜி – ஒரு பார்வை

‘அன்ப்ரேக்கபிள்’ ட்ரைலாஜி – ஒரு பார்வை

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படங்களின் இயக்குநரான மனோஜ் நைட் ஷ்யாமளன் நம்ம ஊர்க்காரர். பாண்டிச்சேரி - மாஹேவில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தவர். 40களின் இறுதியில் இருக்கும் இவர், 25 வருஷத்துக்கும் மேலாக ஹாலிவுட்டில் இயங்கிவரும் மூத்த இயக்குநர். இவரோட ஃப்ளிம் கேரியர் நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. மிகச் சிறந்த படத்தைத் தருவார். அடுத்து செம மொக்கையான படத்தையும் தருவார். கொஞ்சமும் யூகிக்க இயலாதபடி இருக்கும். ஆனால் இவரது அடையாளம் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை. 20 வருஷத்துக்கு முன்னாடி இவர் இயக்கிய ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அவர் இயக்கிய அன்ப்ரேக்கபிள், சைன்ஸ், வில்லேஜ், தி விசிட் போன்றவை கூட தரமான படங்கள் தான். எல்லாப் படங்களிலும் ட்விஸ்ட் இருக்கும். அந்த ட்விஸ்ட் பெரிய காட்சிகளாகக் கூட இருக்காது. ஒரே ஒரு வசனம். அந்த வசனம் மொத்த படத்தின் போக்கையும் தலைக்கீழாக மாற்றிவிடும்...