எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்
அதீத ஹீரோயிசத்தையும், மாஸ் ஹீரோக்களையும், அப்படிப்பட்டவைகளை வியந்தோதிய படங்களையும் பகடி செய்யும் ‘ஸ்பூஃப்’ படமாக ரசிக்க வைக்கிறது இப்படம். தலைப்பே, அத்தகைய பகடியின் ஒரு வடிவம் தான்.
‘நைனா’ எனும் அதீத அதிகாரத்தை வழங்கும் நாற்காலியில், உட்காரத் தகுதியான நபரைத் தேடுகிறான் தாஸ். ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் ஜானியை, கொலைகள் புரியும் பெரிய ‘மாஸ்’ வீரனென நினைத்து தெரியாத்தனமாக நைனாவாகத் தேர்வு செய்து விடுகிறான் தாஸ். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கலகலப்பான கதை.
Cigarette smoking is injurious to health என நான் கடவுள் ராஜேந்திரன் குரலில் ஆங்கில உச்சரிப்பைக் கேட்ட நொடி முதல், திரையரங்கில் கேட்கும் பார்வையாளர்களின் சிரிப்பொலி, அனேகமாக முதல் பாதி முழுவதும் எதிரொலிக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில், சரவணனுக்கு முன் ஜீ.வி.பிரகாஷ் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சி அதகளம். இப்படியொரு கலகலப்...