ஸ்பெக்டர் விமர்சனம்
ஸ்கைஃபாலில் விதைத்த எதிர்பார்ப்பை மிக விரிவாகப் பூர்த்தி செய்துள்ளார் சாம் மெண்டீஸ்.
இதுவரை பார்த்து வந்த 007 படங்களின் இலக்கணத்தை ஸ்கைஃபால் படத்தில் உடைத்திருந்தார் சாம் மெண்டீஸ் எனும் மிதவாதி. இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இலக்கணத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அது அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, வழக்கமான கார் சேஸ் (chase) படத்தில் உண்டு எனினும் அந்த அதி நவீன காரை உருக்கலைக்காமலோ, வெடித்துச் சிதற விடாமலோ நீரில் மென்மையாக மூழ்க வைக்கிறார்.
வில்லன் ஒரு பட்டனைத் தட்டினால் உலகமே அழிந்து விடும்; அப்பொழுது பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலாக வந்து உலகைக் காப்பாற்றுவார் என்ற ஒன்-லைனை, ஸ்கைஃபால் படத்தில் உடைத்தது போலவே இப்படத்திலும் உடைத்துள்ளார் மெண்டீஸ். ‘நீ எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டாலும்.. நீ ஒரு கொலைக்காரன் என்பதுதான் ஒரே நிஜம்!’ என 007 கதாபாத்திரத்தைப் பற...