Shadow

Tag: சாய் பல்லவி

சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்கின்ற தீராத ஆசை – நடிகை தேவயானி ஷர்மா

சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்கின்ற தீராத ஆசை – நடிகை தேவயானி ஷர்மா

திரைச் செய்தி, திரைத் துளி
டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் கூறுகையில், " ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் செய்திருந்தாலும்  எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது.சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையையும் தொடங்கி விட்டேன்...
கார்கி விமர்சனம்

கார்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடும் இயக்குநர் கெளதம் ராமசந்திரன், கடைசி ஃப்ரேம் வரை நம் கவனம் கலையாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த வருடத்தின் மிகச் சிறப்பான படங்களில் ஒன்றாகக் கார்கி புகழடையும்.  பள்ளி ஆசிரியையான கார்கியின் தந்தையைக் காவல் துறையினர் கைது செய்துவிடுகிறது. சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கு என்பதால், காவல்துறையினர் ரகசியமாகவும் கவனமாகவும் இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பெண் ஒருவரால், விஷயம் கசிந்து, கார்கியின் குடும்பம் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறது. தன் தந்தை குற்றமற்றவரென நிரூபிக்கத் தனியளாகப் போராடுகிறார் கார்கி. ஈ மொய்ப்பது போல் சூழும் பத்திரிகையாளர்கள், தந்தையைச் சந்திக்க விடாத நுண்ணியமான அதிகார பலம், வேலையிழப்பு, அவமானம், சமூகத்தின் கோபம் என கார்கி எதிர்கொள்ளும் அனைத்துமே கனமானவை. உண்மையில், படத்தின் கனத்தைக் கூட்ட...
கார்கி – திகில் படத்தை விஞ்சும் இறுதிக்காட்சி

கார்கி – திகில் படத்தை விஞ்சும் இறுதிக்காட்சி

சினிமா, திரைச் செய்தி
பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் "கார்கி" ஆகும். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குநர் கெளதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்ய லட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கெளதம் ராமசந்திரன், "என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் கூறுவீர்கள். ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது. சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அட...
NGK விமர்சனம்

NGK விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை. கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். 'செல்வராகவன் இஸ் பேக்' எனத் துள்ளத் தொடங்கிய மனம், இரண்டாம் பாதியில் அப்படியே சொய்ங் எனத் துவண்டு விடுகிறது. குறிப்பாக, கீதா குமாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி, தன் கணவன் குமரன் மீது சந்தேகப்படும் காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள அதீதமான மனோசக்தி தேவைப்படுகிறது. ஏன் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகளை எல்லாம் தூக்காமல் விட்டார்களோ? மிகச...
‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி

‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி

சினிமா, திரைத் துளி
NGK படத்தில் செல்வராகவனின் பட்டறையில் நடிக்கும் பொழுது கிடைத்த அனுபவத்தைக் குறித்து நடிகை சாய் பல்லவி, "முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே, 'இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும்' என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிகக் கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாகப் படப்பிடிப்புத் தளங்களில் செல்ஃபோன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றிப் பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்புத் தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன என்று அங்குதான் கற்றுக் கொண்டேன். மே...
தியா விமர்சனம்

தியா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கரு' உருமாறி 'லைக்காவின் கரு'வாகி, தியாவாக ஜனித்துள்ளாள். பக்தொன்பது வயதான துளசி கர்ப்பமடைந்து விடுகிறாள். துளசியின் வீட்டினரும், அவளது காதலனான கிருஷ்ணாவின் வீட்டினரும், சிறு சச்சரவிற்குப் பின், இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டு, துளிசியின் கருவைக் கலைக்கச் சொல்கின்றனர். 24 வயதில் இருவருக்கும் சொன்னபடி திருமணமும் செய்து வைக்கின்றனர். அதன் பின் அவர்கள் வீட்டில் தொடர் மரணங்கள் நிகழ்கிறது. எதனால் ஏன் என்பது தான் படத்தின் கதை. 'ப்ரேமம்' படப் புகழ் மலர் டீச்சரான சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் முதற்படமிது. கண்களால் புன்னகைக்கவோ, துள்ளலாய் நடனமாடவோ வாய்ப்பில்லாத ஒரு பாத்திரத்தில் வருகிறார் சாய் பல்லவி. ஆனால், மென் சோகத்தோடு வளைய வரும் அவர் தான் படத்தின் பிரதான குவிமையம். அதனைக் கச்சிதமாக உள்வாங்கிப் படத்திற்கு உயிரினை அளித்துள்ளார் துளசியாக வரும் சாய் பல்லவி. கதாநாயகியின் பாத்திரம் பிரதானமாய் ...