Shadow

Tag: சித்தப்பு சாவணன்

பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ்
அதே கக்கூஸ், அதே கவின், அதே லியா, அதே கடலை, அதே நான், அதே நீங்க. ஏய் யப்பா, முடியலைய்யா கவினு. இடத்தையாவது மாத்தலாம். நாட்டாமைக்கு மரியாதை தருவதைப் பற்றி பிக் பாஸ் கிளாஸ் எடுத்திருப்பார் போல. டாஸ்க் ஆரம்பித்த உடனே, ஒரிஜினல் நாட்டாமை பாட்டு பாடி சேரனைக் கூட்டிட்டு வந்தார். இப்படியே மொக்கையாகவே போய்க் கொண்டிருக்கே என்று யோசித்த 'டைரக்டர்' சரவணன், ‘நான் ஒரு உண்மையைச் சொல்லப்போறேன்’ என சாண்டி, கவினை அழைத்து ஒரு கதை சொல்றார். கதைப்படி பாம்புபட்டி நாட்டாமை சேரனும், கீரிப்பட்டி நாட்டாமி மதுவும் கணவன்-மனைவி. தன் மனைவி தன்னை மாதிரியே நாட்டாமையாக ஆக வேண்டுமென ஆசைப்பட்ட போது, அதைத் தடுக்கிறதானால் இரண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. அவங்களோட குழந்தை தான் லியா. இது எப்படி இருக்கு? இதை வைத்து ஒரு ட்ராமா செய்யலாமென சேரனிடமும், மதுவிடமும் இதைச் சொல்லி, லிவிங் ஏரியால எல்லாரும் கூடி இருக்கும் போது இந்த உண்மைய...
பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ்
காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் சொல்லிக் கொடுத்த சாண்டி, மீராவை எருமையாக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். சாண்டி ஒருநாள் மீராவிடம் மாட்டுவார். அன்னிக்கு இந்த மேட்டர் பேசப்படும். லியாவும் மீராவும் போட்ட கோலத்தை அலங்கோலம் பண்ணிக் கொண்டிருந்தாரு சாண்டி. ‘வருக, நல்வரவு’ என எழுதிருந்ததை, ‘வாந்தி, நல்வாந்தி’ என மாற்றியது மீரா கவனத்துக்கு வர, அவங்க வந்து அதை மாற்...