Shadow

Tag: சித்தார்த் விபின்

“கவுண்டமணி மாற்றே இல்லாத ஜாம்பவான்” – கவிஞர் சினேகன்

“கவுண்டமணி மாற்றே இல்லாத ஜாம்பவான்” – கவிஞர் சினேகன்

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ”இயக்குநர் என்னிடம் பேசும்போது, ஹீரோ கவுண்டமணி’ என்று சொன்னவுடன் வேறு ...
திருமணம் விமர்சனம்

திருமணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக இழந்துவிடுவது நம் பெருமைகளில் ஒன்று. கையில் பணமில்லாவிட்டாலும், பணத்தை எப்படியேனும் புரட்டி வாழ்நாளைக் கடனாளியாகக் கழிக்க அஞ்சாத தற்கொலை மனோபாவம் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மிகவும் அரிதானவை. சேரன் முன் வைக்கும் திருத்தம், திருமண வைபவத்தில் அதீதமாக விரயமாகும் பொருளாதாரத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒன்றை மட்டுந்தான். தலைப்பில் தொனிக்கும் திருத்தங்'கள்' என்ற பன்மை விகுதி ஒரு சினிமாட்டிக் எக்ஸாகிரேஷன் தான். சமூகத்தின் மீதான சேரனின் அதீத காதல் அவரது கலையார்வத்தையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். பெரியண்ணன் பாவனையில், தலைப்பிலேயே 'திருத்தங்கள்' என்று தன் சமூக அக்கறையை அடக்கமாட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். சேரன் பேசிக் கொண்டேயிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டாரிடம் விவாதத்தை முன் வைக்காமல், இதுதான் சரியெனத் தான் நம்பும் விஷயத்தை இடம் பொருள் ஏ...
செயல் விமர்சனம்

செயல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மார்க்கெட் தண்டபாணி எனும் ரெளடியை, யாரெனத் தெரியாமல் மார்க்கெட்டில் வைத்துச் செமயாக அடித்து விடுகிறான் கார்த்திக். அந்த வீடியோ வைரலாகி தண்டபாணியின் மானம் ஆன்லைன் ஏறிவிடுகிறது. இழந்த தன் கெளரவத்தை மீட்க கார்த்திக்கை மார்க்கெட்டில் வைத்துக் கொல்லத் திட்டமிடுகிறான் தண்டபாணி. அவனது திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கார்த்திக்காக ராஜன் தேஜேஸ்வர் எனும் அறிமுக நாயகன் நடித்துள்ளார். நடிப்பும் நடனமும் கை கூடியிருந்தாலும், அவரது தமிழ் உச்சரிப்பு ஓர் அந்நியத்தன்மையைத் தருகிறது. அதுவும் கதைப்படி அவர் வடச்சென்னைவாசி எனும் போது, அவரது பேச்சு குழந்தைத்தனமாக ஒலிக்கிறது. அவரது அம்மா லக்‌ஷ்மியாக வரும் ரேணுகோவோ தனது வழக்கமான பாணியில் பேசியே தன் இருப்பை அழுத்தமாகப் பதிகிறார். இது முழுநீள ஆக்‌ஷன் படமன்று. ஒரு கட்டத்திற்கு மேல், மார்க்கெட் தண்டபாணி முனீஷ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியோடு ...
பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

இசை விமர்சனம், சினிமா
பிரம்மா என்பது நேரடியாகப் படைக்கும் கடவுளையும், டாட் காம் என்பது தற்கால டிஜிட்டல் உலகத்தைக் குறிக்க உதவும் குறியீட்டுச் சொல்லாகவும் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாமம் போட்ட என்.டி.ஆரில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், படத்தில் லாஜிக் இல்லா மேஜிக்கைச் செய்வது சிவன் கோயிலில் தனி சன்னிதி அமையப் பெற்ற கடவுள் பிரம்மா தான். சிவன் அவரது தலையைக் கிள்ளி நான்முகனாக மாற்றிய பின், ‘நமக்கெதுக்கு வம்பு?’ எனப் புராணங்களிலேயே ஓரமாகத்தான் தள்ளி இருப்பார். ஆனால் இப்படத்தில் கலக்கலாய் திருவிளையாடல் புரிகிறார். காமேஸ்வரனுக்கு தான் ராமேஸ்வரனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் என்பது எண்ணம். ஆனால், அனைவரையும் படைத்த பிரம்மன் சிலரிடம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதாகக் காமேஸ்வரன் கருத, பிரம்மன் காமேஸ்வரனின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கிறார். பின் காமேஸ்வரனின் வாழ்க்கை என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ராமேஷ...