Shadow

Tag: சியான் விக்ரம்

“கோமணம் கூச்சம் மகிழ்ச்சி” – தங்கலான் விக்ரம்

“கோமணம் கூச்சம் மகிழ்ச்சி” – தங்கலான் விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ''இந்தப் படத்தைத் தொடங்கும் போது, இது போன்ற ஒரு கதை, இது போன்றதொரு மக்கள், இது போன்றதொரு வாழ்க்கை. அந்தக் காலகட்டத்தில் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு, இன்னல்கள் சவால்கள் என பல விசயங்களை எதிர்கொண்டு தங்கத்தைத் தேடுகிறார்கள். எல்லாத்தையும் மீறி அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. எட்டாத ஒரு விசயத்தை, சுலபமாக கிடைக்காத ஒரு விசயத்தைக் கஷ்டப்பட்டு வாங்க வேண்டியதாக இருந்தது. இந்தப் படத்திற்கான எங்களின் பயணமும் இப்படித்தான் இருந்தது. படத்தில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்தப் படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நடித்திருந்தால் அந்த மக்களின் உண்மையான கஷ்டம...
சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்”-லிருந்து வெளியான காட்சி துணுக்கு

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்”-லிருந்து வெளியான காட்சி துணுக்கு

சினிமா, திரைச் செய்தி
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 'தங்கலான்' படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'தங்கலான்' திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவ...