கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்
"கருவியாலஜி" - பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம்.
அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு பரிமாண வளர்ச்சி பெற்றது? முதல் கால்குலேட்டரோ மணல் லாரி சைஸில் இருந்துள்ளது. இப்படியாக இரண்டாம் பக்கத்தில் தொடங்கும் சுவாரசியம் கடைசி பக்கம் வரை நீள்கிறது.
செல்ஃபோனுக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் உள்ள வித்தியாசமென்ன? சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பயன்பாடுகளென்ன? புல்லட் ரயில்களின் வேகமென்ன? அவை எவ்வாறு இயங்குகின்றன எனப் பக்கத்திற்குப் பக்கம் தகவல்கள்.
ஏ.டி.எம்., மைக்ரோ ஓவன், பேஸ் மேக்கர், டச் ஸ்க்ரீன், ரோபோட் என நீளும் பட்டியலில், பென்சில் சீவும் ஷார்ப்னருக்கும் கோட்டா ஒதுக்கியுள்ளார் ஆயிஷா இரா.நடராசன். தொடக்கத்தில் ஒரு மே...