Shadow

Tag: சில சமயங்களில்

சில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்

சில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்

சினிமா, திரைத் துளி
விமர்சன ரீதியாகக் கவனிக்கப்படும் படங்களைக் கொடுக்கும் பிரியதர்ஷன், கலையம்சம் பொருந்திய படங்களைத் தருவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரைப் பயணத்தில், இன்னொரு வைரக்கல்லாகச் சேர்ந்திருக்கிறது அவர் இயக்கிய 'சில சமயங்களில்' திரைப்படம். இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்கச் சென்று சேரும் விதமான கதையைக் கொ...
இது உலக சினிமா செல்லம்

இது உலக சினிமா செல்லம்

சினிமா, திரைச் செய்தி
இன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக இருக்கும் சூழலில், அந்நோய் பற்றிப் போதிய விழிப்புணர்வு இங்கில்லை. அதை மையமாக வைத்து, எட்டுக் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மருத்துவமனையைச் சுற்றி நிகழும் படமாக ‘சில சமயங்களில்’ படம் உள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகளுக்காகப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. அதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி திரையிடப்படுகிறது. வாக்கெடுப்பில் சிறந்த பத்து அயல் மொழிப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகுமென படக்குழுவினர் நம்பிக்கையோடு உள்ளனர். ஆஸ்கர் லட்சியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். ரசிகர்களுக்குத் திரையிடப்படும் முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை அள்ளுமென்றும் திண்ணமாக உள்ளனர். “நான் நடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்கணும் என்றால் என் கணவரும், புகுந்த வீட்டினரும் ஒத்...